நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா ? ' அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும் ' எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை . பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது . ' இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது ' என்று கூறுகின்றனர் மருத்துவர்கள் செவித்திறன் பாதுகாப்பு ' வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் , கடந்த வியாழக்கிழமையன்று ( பிப்ரவரி 27) அன்று ' செவித்திறன் பாதுகாப்பு ' என்ற தலைப்பில் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தார் . அதில் , இயர்போன் மற்றும் ஹெட்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை எனப்படும் முக்கிய பிரச்னை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார் . ஒலி சாதனங்களைப் பயன்படுத்தி நீண்டநேரம...