இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுத்தமான காற்றுடைய நகரங்கள்'- முதலிடம் பிடித்த தமிழக மாவட்டம் எது தெரியுமா?மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்ட அந்தத் தரவுகளில் இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள், காற்று மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது

படம்
      சுத்தமான காற்று என்பது சுத்தமான காற்று என்பது, நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் நல்லதாக இருப்பதாகும்.   சுத்தமான காற்றுக்காக பல அமைப்புகள், தனிநபர்கள், தொழில்துறை தலைவர்கள் பணியாற்றுகின்றனர்.   சுத்தமான காற்றுக்காக மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள்:   மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் திறனை வலுப்படுத்துதல், காற்றை சுத்தம் செய்வதற்கான நாடு தழுவிய இயக்கங்களை ஆதரித்தல், காற்று மாசுபாட்டைக் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், காற்று மாசுபாட்டைத் தணிப்பதற்கான கொள்கைகளை வகுத்தல்.               இந்தியாவில் தூய்மையான காற்றை கொண்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கிறது . சுத்தமான   காற்றுள்ள டாப் 10 நகரங்களில் திருநெல்வேலி முதலிடம் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்), மடிக்கேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு), கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), சால் (சத்தீஸ்கர்) ஆகிய ...

ஜல்லிக்கட்டு ஆபத்தை இன்னும் குறைக்க வேண்டும்! மாடு முட்டியதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த 22 வயதுள்ள மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கும் சம்பவம்

படம்
    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கலன்று நடந்த போது , மாடு முட்டியதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த 22 வயதுள்ள மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கும் சம்பவமாக அமைந்துள்ளது . பலத்த காயங்களுடன் இன்னும் 12 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் . செய்தியாளர் , பார்வையாளர்கள் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர் . ஜல்லிக்கட்டு போட்டிகள் நமது கலாச்சாரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நமது கலாச்சாரம் , பண்பாடு மற்றும் உணர்வுப்பூர்மாக தொடர்புடையதாக இருந்தாலும் , அதில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது அவசியமாகிறது . மாவட்டநிர்வாகம் சார்பில் வீரர்கள் மாடு பிடிக்கும் தளத்தில் தென்னைநார் போடப்பட்டு காயங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது . மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைசெய்யப்பட்டு திடகாத்திரமான மாடுகள் மட்டுமே களமிறக்கப்படுகின்றன . அதேபோன்று , மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு ஆரோக்கியமான நிலையில் இருக்கும் வீரர்கள் மட்டுமே மா...