சுத்தமான காற்றுடைய நகரங்கள்'- முதலிடம் பிடித்த தமிழக மாவட்டம் எது தெரியுமா?மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்ட அந்தத் தரவுகளில் இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள், காற்று மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது

 

 


 

சுத்தமான காற்று என்பது

சுத்தமான காற்று என்பது, நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் நல்லதாக இருப்பதாகும். சுத்தமான காற்றுக்காக பல அமைப்புகள், தனிநபர்கள், தொழில்துறை தலைவர்கள் பணியாற்றுகின்றனர். 

சுத்தமான காற்றுக்காக மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள்: மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் திறனை வலுப்படுத்துதல், காற்றை சுத்தம் செய்வதற்கான நாடு தழுவிய இயக்கங்களை ஆதரித்தல், காற்று மாசுபாட்டைக் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், காற்று மாசுபாட்டைத் தணிப்பதற்கான கொள்கைகளை வகுத்தல். 

 

 

 


 

 

 

இந்தியாவில் தூய்மையான காற்றை கொண்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கிறது.

சுத்தமான காற்றுள்ள டாப் 10 நகரங்களில் திருநெல்வேலி முதலிடம் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்), மடிக்கேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு), கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன

நாடு முழுவதும் உள்ள நகரங்களின் சமீபத்திய காற்றுத் தரக் குறியீடு (AQI) ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்ட அந்தத் தரவுகளில் இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள், காற்று மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. சுத்தமான காற்றைக் கொண்ட நகரங்களில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துப் பெருமை சேர்த்திருக்கிறது

திருநெல்வேலி மாவட்டம்

நெல்லையில் காற்றின் தரக் குறியீடு 24 ஆக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது. தஞ்சையில் காற்றின் தரக் குறியீடு 45. தூய்மையான காற்றின் தரத்தை கொண்ட பட்டியலில், நஹர்லகுன் (அருணாச்சல பிரதேசம்), மடிகேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சாவூர் (தமிழ்நாடு), கொப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரப்பிரதேசம்), ஹூப்பள்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), Chhal (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 302 ஆக உள்ளது.

 

 

காற்றின் தர குறியீடு ( AQI)

AQI அளவுகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 0-50 வரை இருந்தால் பாதுகாப்பானது. 51-100 வரை இருந்தால் திருப்திகரமானது என்று கூறப்படுகிறது

இதுவே 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான காற்று மாசு என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் மிகவும் மோசமான காற்றுமாசு என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் கடுமையான காற்று மாசு என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

    "This Content Sponsored by Buymote Shopping app

    BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

    Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

    Click Below Link and Install Application:  

    https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

        Sponsor Content:

                     #buymote                 #buymoteeshopping     #buymoteonline 

                        #buymoteshopping                             #buymoteapplication"

 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

5 லட்சம் மரம் நட்டு பராமரிக்கனும்... மகன் நினைவாக மலையையே பசுமையாக்கும் தந்தை தவறி போன தனது மகனின் நினைவாக