இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

VOC Unknown Facts: கடைசி காலத்தில் எழுதியது கடன் உயில் தான்... செல்வந்தர் வஉசி குறித்து அறிந்திடாத தகவல்கள்.. செல்வந்தராக அறியப்படும் வஉசி, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தனது சொத்துக்களை இழந்து சுடுகாடு அருகே வாடகை வீட்டில் வசித்தார்

படம்
        இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு தனித்துவமிக்க போராளி என்று சொன்னால் அது வஉசி தான் . அவர் அளவிற்குச் சித்ரவதைகளை எந்த தலைவர்களும் அனுபவித்தது இல்லை என்றே கூறலாம் . வஉசி குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் இரா . நாறும்பூநாதன் கூறுகையில் , " ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக இந்தியா வந்தார்கள் . ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இடங்களைப் பிடித்து இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி விட்டனர் .     அப்போது போராடியவர்களில் வஉசிக்கு முக்கிய பங்கு உண்டு . 1906 இல் தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனியை ஆரம்பிக்கிறார் . இந்நிறுவனம் வெறும் வெள்ளைக்காரர்களுக்குப் போட்டியாக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது அல்ல . வணிகம் ஒன்றும் இந்தியாவுக்குப் புதிது அல்ல . நாமும் அதை செய்வோம் என ஆரம்பிக்கிறார் . தூத்துக்குடியில் இருக்கக்கூடிய வணிகர்கள் செல்வந்தர்கள் ஆதரவோடு ஆரம்பிக்கிறார் . மதுரை தமிழ் சங்க தலைவராக இருந்த பாண்டித்துரை தேவர் இதில் 40 ஆயிரம் பங்குகளில் கணிசமான பங்கை ம...