VOC Unknown Facts: கடைசி காலத்தில் எழுதியது கடன் உயில் தான்... செல்வந்தர் வஉசி குறித்து அறிந்திடாத தகவல்கள்.. செல்வந்தராக அறியப்படும் வஉசி, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தனது சொத்துக்களை இழந்து சுடுகாடு அருகே வாடகை வீட்டில் வசித்தார்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு தனித்துவமிக்க போராளி என்று சொன்னால் அது வஉசி தான். அவர் அளவிற்குச் சித்ரவதைகளை எந்த தலைவர்களும் அனுபவித்தது இல்லை என்றே கூறலாம். வஉசி குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கூறுகையில், "ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக இந்தியா வந்தார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இடங்களைப் பிடித்து இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி விட்டனர்.
அப்போது போராடியவர்களில் வஉசிக்கு முக்கிய பங்கு உண்டு. 1906இல் தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனியை ஆரம்பிக்கிறார். இந்நிறுவனம் வெறும் வெள்ளைக்காரர்களுக்குப் போட்டியாக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது அல்ல. வணிகம் ஒன்றும் இந்தியாவுக்குப் புதிது அல்ல. நாமும் அதை செய்வோம் என ஆரம்பிக்கிறார். தூத்துக்குடியில் இருக்கக்கூடிய வணிகர்கள் செல்வந்தர்கள் ஆதரவோடு ஆரம்பிக்கிறார்.
மதுரை தமிழ் சங்க தலைவராக இருந்த பாண்டித்துரை தேவர்
இதில் 40 ஆயிரம் பங்குகளில் கணிசமான பங்கை மதுரை தமிழ் சங்க தலைவராக இருந்த பாண்டித்துரை தேவர் என்பவர் கொடுத்தார். அவர் வந்தால் கப்பலோடு வருவேன் அல்லது வங்கக் கடலில் வீழ்வேன் எனக் கூறிவிட்டுச் சென்றார். முதலில் வாடகைக்குக் கப்பல் வாங்கி தூத்துக்குடி - கொழும்பு இடையே வணிகப் போக்குவரத்து நடந்தது. வாடகைக்குக் கப்பல் கொடுத்தவர்களை ஆங்கிலேயர்கள் மிரட்டி உள்ளனர்.
இரண்டு கப்பலைச் சொந்தமாக வாங்கினார்
உடனே பத்து லட்சம் தொகையில் இரண்டு கப்பலைச் சொந்தமாக வாங்கினார் வஉசி. அப்பொழுது தாய்க்கு இரட்டைக் குழந்தை பிறந்தால் எவ்வாறு மகிழ்வாரோ அதேபோல் இந்தியாவுக்கு இரட்டைக் கப்பல் கிடைத்தது தேசம் மகிழ்கிறது என பாரதி கூறியுள்ளார். அந்தக் கப்பலில் 40 முதல் வகுப்பு, 24 இரண்டாம் வகுப்பு, 1300 மூன்றாம் வகுப்பு இருக்கை வசதியும் இருந்தன. மேலும் 4000 மூடை சரக்குகளையும் கொண்டு செல்லலாம். இந்திய வணிகர்களுக்கு இந்த கப்பல் சவுரியத்தை ஏற்படுத்தியது
உடனே வெள்ளைக்காரர்கள் இரண்டு ரூபாய் இருந்த கட்டணத்தை ஒரு ரூபாயாகக் குறைக்கிறார்கள். வஉசி கப்பல் கட்டணத்தை 50 காசு எனக் குறைத்து இயக்கினார். சுதேசி இயக்கம் தீவிரமடைகிறது. அந்நிய பொருட்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இவருடன் சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடியில் மில் ஒன்றில் தொழிலாளர்கள்
தூத்துக்குடியில் மில் ஒன்றில் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடும் போது அது நியாயமானது என கருதி ஆதரவளித்தார்.
அப்பொழுது தனது கையிலிருந்து பணத்தை வைத்து மூன்று நேரமும் தொழிலாளிகளுக்கு உணவு வழங்கினார். வஉசி அடிப்படையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா மட்டுமல்ல இவரும் வழக்கறிஞர். பல நேரத்தில் தந்தையை எதிர்த்து வாதாடியுள்ளார். அதோடு மட்டுமல்ல காவலர், நீதிபதி ஆகியோரையும் எதிர்த்து வாதாடியுள்ளார்
தேசியக் கட்சி
உடனே வஉசியின் அப்பா அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் பயிற்சி பெற அனுப்புகிறார். அங்கு சென்ற வஉசி தேசியக் கட்சியில் இணைகிறார். தொடர்ந்து ஈடுபாட்டுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். 1908இல் சுதந்திரப் போராட்ட வீரரின் விடுதலையை வரவேற்க திருநெல்வேலி வந்தார். வஉசிக்கு அப்பொழுது கலெக்டர் அனுமதி மறுக்கிறார். அதை மீறி பொதுக்கூட்டம் நடத்துவதால் இவரைக் கைது செய்கின்றனர். இதனைக் கண்டித்து போராட்டம் நடக்கிறது. அப்போது துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதில் நான்கு பேர் கொல்லப்படுகின்றனர்.
வந்தே மாதரம் சொன்னதற்காக மண்டையை உடைத்தார்கள்
இந்தியாவில் வந்தே மாதரம் சொன்னதற்காக மண்டையை உடைத்தார்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் வெள்ளைக்காரர்களை வந்தே மாதரம் செல்ல வைக்கின்றனர் தூத்துக்குடிகாரர்கள். இந்த எழுச்சிக்கு காரணமான வஉசி மீது ஆங்கிலேயர்களுக்கு மிகக் கோபம் ஏற்படுகிறது. எனவே 40 ஆண்டுகள் வரை கடும் காவல் தண்டனை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து நன்னடத்தை காரணமாக நான்கே முக்கால் ஆண்டுகள் என தண்டனை குறைந்தது. ஆனாலும் அந்த ஆண்டுகள் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தார்.
மாடுகள் இழுக்கும் செக்கை சிறையில் தனியாக இழுத்தார். சிறையிலிருந்து விடுதலையான அவர் சொந்த ஊருக்கு வரவும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாகச் சிறுசிறு தொழில் செய்கிறார். தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சென்னையில் குறைவான வாடகையான சுடுகாடு அருகே இருந்த வீட்டில் தங்குகிறார்.
கடைசியாக இவர் எழுதிய உயில், கடன் பத்திரமாக மட்டுமே இருந்தது. அதனைப் படித்தால் ரத்த கண்ணீர் வந்துவிடும். அதிலிருந்து 12 நாட்களில் இறந்தும் விடுகிறார். வசதியாக வாழ்ந்த அவர் விடுதலைப் போராட்டத்திற்காக எல்லாவற்றையும் இழந்தார். வஉசியின் பெயர் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்" எனத் தெரிவித்தார்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



கருத்துகள்
கருத்துரையிடுக