5 லட்சம் மரம் நட்டு பராமரிக்கனும்... மகன் நினைவாக மலையையே பசுமையாக்கும் தந்தை தவறி போன தனது மகனின் நினைவாக
5 லட்சம் மரம் நட்டு பராமரிக்கனும்... மகன் நினைவாக மலையையே பசுமையாக்கும் தந்தை...
மறைந்த தன் மகன் நினைவாக 5 லட்சம் மரங்கள் நட்டு தன் மகனைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புபவரால் ஒரு மலையே பசுமையாகி வருகிறது.
நாம் வாழும் இந்த வாழ்க்கை மிகவும் அழகானது, சுவாரசியமானது மற்றும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. ஆனால் இந்த வாழ்வில் நாம் நேசித்தவர்களை இழப்பது எவ்வளவு வலி மிகுந்தது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். அத்தகைய பெரும் இழப்பு நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடக்கிவிடும்.
மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தனது மகனோடு சேர்த்து புதைக்கப்பட
அப்படித் தனக்கு நெருக்கமான தனது இளைய மகனை இழந்ததின் காரணமாக, தனது மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தனது மகனோடு சேர்த்து புதைக்கப்பட்ட நிலைக்கு ஆளான முனுசாமி, இயற்கையின் உதவியால் எப்படி மீண்டு வந்தார் என்பது குறித்தான சுவாரசியமான செய்தித் தொகுப்பு தான் இது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டைக்கு அருகில் உள்ள வில்வநாதபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழ்நாடு வனத்துறையின் கீழ் ஒப்பந்ததாரராகப் பணி செய்து வந்துள்ளார். பிறகு பொதுப்பணித்துறை போன்ற அமைப்புகளிலும் ஒப்பந்ததாரராகச் செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு இலக்கியப் பெருந்தகை, இசையமுது என இரண்டு மகன்கள். இவருடைய மனைவி கௌசலை வாலாஜாப்பேட்டை அருகில் உள்ள சிற்றூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்து வருகின்றார்.
மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த முனுசாமியின் வாழ்க்கையில் பேரதிர்ச்சியாக, இளைய மகன் இசையமுது தவறி விட்டார். 17 வயது மட்டுமே ஆன தனது அன்பு மகன் தன்னை விட்டுச் சென்றதை முனுசாமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்கள் தான் சென்றதே தவிர மகனை இழந்த சோகம் அவரை விட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. ஏதாவது செய்து, இந்த கடினமான சூழலிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தார் முனுசாமி.
அப்போது தனது மனதிற்குப் பிடித்த ஏதாவது ஒரு வேலையைச் செய்து, இந்த கடினமான சூழல் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று நினைத்து. தனது நண்பர்களின் அறிவுறுத்தலின் படி தனது ஊருக்கு அருகில் உள்ள செட்டி மலை (காஞ்சன கிரி மலை) என்ற பகுதிக்குச் சென்று, தனது மகனின் நினைவக சில மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார்.
தவறி போன தனது மகனின் நினைவாக
தவறி போன தனது மகனின் நினைவாக, இந்த மரக்கன்றுகளை நட்ட அவர் அதனைத் தனது மகனாகவே பாவித்துப் பராமரித்து வளர்த்து வந்துள்ளார். மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருவதால் இருண்டு போன தனது வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைவதை உணர்ந்துள்ளார்.
பின்னர் செட்டி மலைப்பகுதியில் மரம் நட்டு அவற்றைப் பராமரிப்பதையே ஒரு சேவையாகச் செய்யலாம் என எண்ணி மரம் நடுவதை வழக்கமாக்கியுள்ளார். 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 3,400 மரக்கன்றுகளைச் செட்டி மலையில் நட்டு அவற்றைத் தினமும் காலை, மாலை என இருவேளையும் பராமரித்து வருகிறார்.
மேலும் வில்வநாதபுரம் பஞ்சாயத்து உதவியுடன் குழாயின் மூலம் செடிகளுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு, மலை மீது அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, தினமும் செடிகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
மேலும் நண்பர்களின் சிலரின் உதவியுடன் மரம் நடுதல், பனை விதைகளை நடுதல், நீர் பாய்ச்சுதல், கூலிக்கு ஆட்களை வைத்துக் களை எடுத்தல் போன்ற காரியங்களையும் முன்னின்று நடத்தி வருகிறார். இந்தச் செட்டி மலையில் ஆலமரம், அரசமரம், இலுப்பை, அத்தி, நெல்லி, நாவல் என மொத்தம் 15 வகையான நாட்டு மரங்களை நட்டு தினந்தோறும் பராமரித்து வருகிறார்.
தமிழக அரசு 2023ஆம் ஆண்டிற்கான கிரீன் சாம்பியன் விருது
இந்த செட்டி மலையில் மரம் நடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உரிய அனுமதி வாங்கிய பின்னரே இங்கு மரம் நடப்பட்டு வருகிறதாம். இவரது இந்த சேவையைப் பாராட்டி தமிழக அரசு 2023ஆம் ஆண்டிற்கான கிரீன் சாம்பியன் விருதும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் அளித்துப் பாராட்டியுள்ளது.
மேலும், முனுசாமி மகன் இசையமுதுவின் பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை உண்டாக்கி, அதன் மூலம் 5 லட்சம் மரங்களை நட்டு, அதைத் தனது மகனைப் போலவே பராமரிக்க வேண்டும் என்பதே இவரது லட்சியமாக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
வாழ்க்கைப் பயணத்தின் நடுவே வரும் இழப்புகளுக்காகவும், கஷ்டங்களுக்காகவும் காலம் முழுவதும் வருத்தப்பட்டுக் கொண்டு, வாழ்க்கைப் பயணத்தில் தேங்கி நிற்காமல், மகனின் இழப்பிலிருந்து வெளியேற இயற்கையின் மரக் குழந்தைகளோடு சேர்ந்து பயணிக்கும் இயற்கை ஆர்வலர் முனுசாமியின் செயல் காலம் கடந்தும் காடு போல் நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை...
"This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application:
https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



கருத்துகள்
கருத்துரையிடுக