தோல்விகளை சாதனையாக மாற்ற வேண்டுமா? இதைப் பின்பற்றுங்க நண்பர்களே! வெற்றி உங்கள் வசம் தான் என்னதான் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தாலும் எல்லாமே தோல்வியில் முடிகிறது என்றால் பின்வரும் வழிகளை பின்பற்றுங்கள்
நண்பர்களே திறமைகள் என்பது அனைவரிடமும் நிறைந்து உள்ளது . ஆனால் அதை செயல்படுத்தும் விதங்களில் தான் உனக்கான இடம் வெற்றியா தோல்வியா ? என்று அமைகிறது வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் நமக்குள் ஒலித்துக் கொண்டிருந்தாலே தோல்விகள் எல்லாம் தவிடு பொடியாக மாறிவிடும் இந்த உலகத்தில் வல்லவனாக யாரும் பிறந்ததில்லை . தன்னம்பிக்கை என்ற சுடர் தீபம் உனக்குள் எரிந்து கொண்டிருந்தால் இந்த அகிலத்தையே உன் கைகளுக்குள் அடைக்கலாம் தளர்ந்து நிற்காதே வெற்றி என்னும் மைல்கல்லை அடைய துணை செய்யும் மிக சிறந்த ஆயுதமே நம்பிக்கை . அதை மட்டும் வளர்த்துக் கொள்ள உன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் . எந்த ஒரு செயலை செய்தாலும் அதை முடியாது என்று ஒரு மனது சொல்லிக் கொண்டே இருக்கும் ஆனால் இன்னொரு மனது இதுவெல்லாம் உனக்கு சுஜிபி மேட்டர் இதை ஈசியாக முடித்து விடலாம் என்று சொல்லும் . ஆனால் நாம் முடியாது என்று சொல்வதை கேட்டு மனம் தளர்ந்து போய்விடுவோம் . அப்படி மட்டும் தளர்ந்து போய் விடவே கூடாது . நமக்கு வெளியே ...