விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.

 

     


 

 

ஆனால் அது சரி செய்யக்கூடியது தான். அதற்காக இப்படி உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு விரத்தியாக மாறி விடாதீர்கள்.

கூல் மச்சி:

ஒரு நாள் சந்தோஷமாக கழிய வேண்டும் என்று தான் நாம எப்பவும் நினைத்துக் கொண்டே இருப்போம். ஆனால் திடீரென்று எங்கிருந்தோ வரும் பிரச்சனைகள் நமக்காகவே செய்து வைத்தது போல, வந்து நம்மை மொத்தமா டிஸ்டர்ப் ஆக்கிவிட்டு சென்று விடுகிறது. சில நேரம் காலை விடிந்ததும் வீட்டில் தொடங்கி விடுகிறது. சில நேரம் அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ, உறவினர்கள் மூலமாகவோ தொடர்ந்து பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதற்காக நாம் விரக்தியாக இருந்தால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.




நோ பீலிங்:

எப்போதும் எது நடந்தாலும் நன்மைக்கே என்பதை மட்டும் நாம மனசுக்குள்ள ஆழமா விதைத்து விட வேண்டும். எதுவும் நிரந்தரமில்லை. கவலைகளாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தாலும் சரி, எல்லாமே அடுத்த நொடி சரியாகிவிடும், மாறிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை தான். அதை நீங்களும் பலமுறை அனுபவித்து இருப்பீர்கள். வேறு எதற்காக இப்படி நடந்து முடிந்த விஷயத்தை நினைத்துக் கொண்டு வருந்திக் கொண்டிருக்க வேண்டும்.

டோன்ட் ஒர்ரி:

அதிகமாக நாம் பிளான் போட்டு வைத்திருக்கும் செயல் நடக்காமல் போகும் தான் நம்மை அறியாமல் விரத்தியும் கோபமும் வருகிறது. வந்தால் மலை போனால்..? உங்களுக்கே தெரியும், என்ன வார்த்தை என்று...! அப்படி நினைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் மனநிலை ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தாலே அடுத்தடுத்த பிரச்சனைகள் வரும் அதற்கு டாடா காட்டிவிட்டு கிளம்பி போய் விடுவோம். நேற்று நடந்த நிகழ்வுகள் இன்று நமக்கு சிரிப்பாக இருக்கும்.




ஜுஜுபி மேட்டர்:

நீங்களே நினைத்து பாருங்கள் ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனை வந்திருக்கும் அப்போது அது உங்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். இதிலிருந்து எப்படி மீழ்வேன் என்று நீங்களே நினைத்து இருப்பீங்க. ஆனால் கஷ்டப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பிறகு இப்ப நீங்க அதை நினைச்சு பாருங்க..!? உங்களுக்கே தெரியும். இதுக்கா அன்னைக்கு அந்த அளவு கஷ்டப்பட்டோம் என்று, அதேபோலத்தான் இப்போதும் நடப்பதும், அதனால் இதை நினைச்சு பீல் பண்ணாம அடுத்து என்ன நடக்க போகுது என்பதை யோசித்துப் பாருங்க.




ஆர் யூ ஹேப்பி பாஸ்:

  இதற்கு முன்பு நடந்த நல்ல விஷயங்களை நீங்கள் கோபமாக இருக்கும்போது நினைத்து பாருங்க உங்க முகத்தில் ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். அது போதும் மக்கா, போய் அடுத்த வேலைய பாருங்க. இப்படி இடிஞ்சு போயி எதற்கெடுத்தாலும் யோசிக்காதீங்க. உங்களுக்கு தனித்திறமை இருக்கு, இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு தூசுக்கு சமம். நீங்கள் இதுவரைக்கும் எத்தனையோ பிரச்சனைகளை கடந்து வந்திருக்கீங்க. இதை யோசிச்சிட்டு இருக்கீங்களே! இனிதான் உங்களுக்கு பெரிய சந்தோஷமே வரப்போகுது.... பாய் நண்பர்களே,


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application:  

https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: 

#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

5 லட்சம் மரம் நட்டு பராமரிக்கனும்... மகன் நினைவாக மலையையே பசுமையாக்கும் தந்தை தவறி போன தனது மகனின் நினைவாக

ஆபரேஷன் சிந்தூர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஆபரேஷன் சிந்தூர்!