எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்

 

  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.

     இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்

    

    க்களின் வாழ்க்கை எப்படி சொல்லப்பட வேண்டும்வாழ்வையும்மகிழ்ச்சியையும்திறமைகளையும்அதன் ஊடான கொண்டாட்டத்தையும்அந்த வாழ்வானது தொடர்ந்த வன்முறைக்குக் கீழ் நிகழ்வதையும் சித்தரிப்பது என்பது தீண்டாத வசந்தத்தில் நடக்கிறதுசொல்லப் போனால்ஏழு தலைமுறைகள் (Roots) நாவலை விட "தீண்டாத வசந்தம்ஒரு படி உயர்ந்ததுஅந்த நாவலின் வடிவத்தின் சுவடுகள் இங்கு நிறையவே காணப்படுகின்றனஆனால்அதை விட ஆழமாகஉழைப்பின் மேன்மையையும்அதை சுரண்டும் அற்பத்தனத்தையும்அதோட இணைந்த அரசியலையும் அற்புதமாகக் காட்டுகிறதுதீண்டாத வசந்தம்.

 


 

"தீண்டாத வசந்தம்

எல்லண்ணாவும் சுபத்ராவும்ரூத்தும்ரூபேனும்எல்லண்ணாவின் அத்தை பூதேவியும் அவரது அம்மா அப்பா பிச்சையும்அம்மா லிங்காலுவும்பிச்சையின் மச்சான் எங்கட நரசுவும் என மறக்க முடியாத நபர்கள்எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான கோர்வையான கதையோட்டம்பாத்திரப் படைப்பு.

நாகண்ணாஉறுமி சந்திரப்பாநாகண்ணாவின் அப்பா நாரிகானும்நாரிகானும் மாத்தையாவும் நடத்தும் வீரப் போரும்சுபத்திராவின் ஆவேசப் போரும்எல்லண்ணாவின் பயணங்களும்அவரது பையன் சிவண்ணாவும் சசிரேகாவும்தாது வருஷப் பஞ்சம்கலைகளிலும் இலக்கியத்திலும் நிலவும் ஆளும் சாதியினரின் ஆதிக்கம்வெள்ளைக்கார ஆட்சியிலும் கிருத்துவ மதத்திலும் கூட இடம் பிடிக்கும் சாதி ஆதிக்கம்பஞ்ச நிவாரண பணியிலும் தீண்டாமைசிவய்யா சிமோன் ஆவதுஅதிலிருந்து ரூபன்ரூத்இம்மானுவேல்மேரிஜெசிரூபி என போராட்ட பாரம்பரியத்தை 300 பக்கங்களில் சொல்லி விடுகிறார்கல்யாண் ராவ்.

  

மக்களின் இலக்கியம்-சின்னச் சின்ன வாக்கியங்கள்

  சின்னச் சின்ன வாக்கியங்களாக இருப்பதைப் பற்றி கல்யாண் ராவிடம் பத்திரிகை பேட்டியில் கேள்வி கேட்கிறார்கள்ஆமாம்அப்படித்தான் மக்களின் இலக்கியம் உள்ளது என்கிறார்மக்களின் வாழ்வும்போராட்டமும் கதைகளாக பாடல்களாக கட்டப்பட்டு ஊரெங்கும் பரவுகிறதுதாய் நாவலில் பாவெல் கற்றுக் கொண்டு பேசும் உழைப்பின் பெருமையைஇரத்தத்தோடும் வாழ்வோடும் உணர்ந்த சமூக மக்கள் உள்ளுணர்வாக கொண்டாடுகிறார்கள்.

ஆளும் வர்க்க அரசியல்கணக்குப் பிள்ளைரெட்டிபறையர்சக்கிலியர்வண்ணார் என்று சாதிகளின் பெயர்களையும் பொருத்தமாக மொழி பெயர்த்து ஆந்திராவில் நடக்கும் தமிழ்க் கதையாகவே ஆக்கி விட்டார் மொழிபெயர்ப்பாளர்இதே கதை தமிழகத்தின் ஆயிரம் கிராமங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் நடந்திருக்க வேண்டும்.

மக்களின் இலக்கியம்

கர்ணன் படத்தில் தீண்டாத வசந்தத்தின் வரிகளைப் பார்க்க முடிந்ததுதீண்டாத வசந்தத்தில் வரலாற்றின் வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனமக்களின் இலக்கியத்தில் இருக்கும் தொடர்ச்சி இந்தப் படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

            1980-களில் லட்சுமிசிவசங்கரிஇந்துமதிவாசந்திசுஜாதாராஜேஷ் குமார்சுபாபட்டுக்கோட்டை பிரபாகர் என்று வாசித்து ஒரு கட்டத்தில் பாலகுமாரன் மிகப்பெரிய படைப்பாளியாகத் தெரிந்தார்சென்னைக்கு வந்த பிறகு தமிழ் இலக்கிய உலகின் விளிம்பை எட்டிப் பார்த்த போது, 'இவர்கள் எல்லாம் வணிக எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன்தான் உலகத் தரத்திலான சிறுகதை எழுத்தாளர்என்றார்கள்அவரிடம் செல்லம்மாவுக்கு வைத்தியம் பார்க்கும் துணிக்கடையில் வேலை பார்க்கும் பிள்ளையின் மேல்சாதி வறுமைக்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. 'உலகத்தின் 20 படைப்பாளிகளில் தானும் இருப்பேன்என்று சொல்லிக் கொள்ளும் ஜெயமோகனின் கதைகளில் உழைக்கும் மக்களின் வாழ்வு டிராமாத்தனமாக காட்டப்படுவதாகத்தான் இருந்தது.

 

 


 

இவ்வளவு வாசிக்கக் கூடிய பழக்கம் இருந்தும், 2004-ல் வெளியான தீண்டாத வசந்தம் நூலை 18 ஆண்டுகளாக வாசிக்காமல் இருந்ததுவெட்கமாக இருந்ததுபலமுறை நூலின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும்தமிழ் புனைவு வாசிப்பதில் சலிப்பும் விலகலும் ஏற்பட்டிருந்ததுவலைப்பதிவுகள்சமூக வலைத்தளங்கள் என்று வாழ்க்கை நகர்ந்து விட்டிருந்ததுஇலக்கிய வாசிப்பு என்றால் ஆங்கிலத்தில் டால்ஸ்டாய் எழுத்தையும்அமெரிக்க எழுத்துக்களையும்பிரிட்டிஷ் எழுத்துக்களையும் வாசிப்பது என்றாகி விட்டது.

        Roots நாவலை கல்லூரியில் படிக்கும் போதுஅமெரிக்கன் நூலகத்தில் எடுத்து வாசித்து விட்டேன். War and Peace நாவலை டாடாவில் வேலை செய்யும் போது வாசித்து விட்டேன்அவற்றின் பிரம்மாண்டமும் ஆழமும் பார்த்த பிறகு குட்டையில் மீன் பிடிப்பதாக அமையும் தமிழ் படைப்புகளை (எனக்கு அறிமுகமானவற்றைபடிப்பதில் சலிப்பு ஏற்பட்டதுஅதன் மீது ஒரு இகழ்வும் இருந்தது.

எரியும் பனிக்காடு

எரியும் பனிக்காடு என்ற நாவல் பிடித்தமானதுஆனால், “தீண்டாத வசந்தம்"தான் தமிழின் நாவல்எப்படி பாரஞ்சித்தின் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் மக்களின் வாழ்க்கையை கொண்டு வந்ததோஅதில் நிரம்பியிருக்கும் கொண்டாட்டங்களையும்திறமைகளையும்உழைப்பையும்போராட்டங்களையும் சேர்த்து கொண்டு வந்ததோமாரி செல்வராஜின் படைப்புகள் எப்படி திரையுலகை புரட்டிப் போட்டனவோஅது போல புரட்டிப் போட்டிருக்கும் படைப்பு தீண்டாத வசந்தம்.

எஸ் ராமகிருஷ்ணன் 100 தமிழ் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தந்திருக்கிறார்அதில் எதுவும் இது போன்ற வாழ்க்கை அனுபவத்தை கற்றுக் கொடுக்கவில்லை.

 கல்யாண் ராவின் எழுத்தில் வாழ்வும் உண்டுவாழ்விலிருந்து பிரிக்க முடியாத அரசியலும் உண்டுகாங்கிரஸ் அரிசன சேவா சங்கம் வருகிறதுஅதிலும் ரெட்டிகள் இருக்கிறார்கள்அம்பேத்கரின் விமர்சனம் வருகிறதுகிருத்துவ மதப் பிரச்சாரம் வருகிறதுஅதையும் ஆளும் சக்திகள் தமதாக்கிக் கொள்கிறார்கள்யாராலும் கைப்பற்ற முடியாத சக்தியாக கம்யூனிசம் வருகிறதுஅதை ஒடுக்குகிறார்கள்ராமானுசத்தையும் போராடும் தோழர்களையும் அடித்து கொன்று விடுகிறார்கள்இம்மானுவேல் நூற்றுக் கணக்க்கானஆயிரக்கணக்கான மக்களின் தோழனாக மரிக்கிறான்ரூத்-ஆல் எழுத முடியாத இமானுவேலின் வாழ்க்கையை அடுத்த நாவலாக எழுத வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர்இமானுவேல்ஜெசிமேரிரூபி இந்தத் தலைமுறையின் வாழ்க்கை இன்னொரு காவியமாக இருக்கும்.

  சாதியை அழித்தொழிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தோழர்கள் விளக்கிக் கொண்டிருந்தார்கள்அதில்சாதி ரீதியான வேலைப் பிரிவினை எப்படி தனிநபரை ஒடுக்குகிறது என்று அம்பேத்கர் விளக்குவதைச் சொல்லியிருந்தார்கள்அருந்ததி ராய் மிகச்சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் அவரால் வாழ்வைச் சொல்ல முடியவில்லைவாழ்க்கையில் இருந்து விலகிய பாத்திரங்களின் பார்வையிலிருந்துதான் வாழ்வை பார்க்க முடிகிறதுஅவரால்அது அவரது தவறில்லைஅவர் பிறந்த இந்திய சமூகத்தின் சாதியக் கட்டமைப்பின் பிரச்சினை.

சங்கிகள் நடத்திய கிளப் ஹவுஸ் விவாதத்தில், ‘பிராமணனான என்னை பூசை செய்ய விடவில்லைஎன்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்அதைச் சொல்லிகோயில்களில் பிற சாதியினர் அர்ச்சகர் ஆக முடியாது என்று நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். “என்னை ஏன் பூசை செய்ய விட மாட்டேன் என்கிறீர்கள்என்று கொதிக்க முடியவில்லை அவருக்குஇது ஒரு மனித விரோதமுன்னேற்றத்துக்கு விரோதமான கட்டமைப்பு

அதை மிகப் பிரமாதமாகவரலாற்றோடு அதன் அநீதிகளோடுஅதன் ஓட்டங்களோடு கொண்டு வந்திருக்கிறதுதீண்டாத வசந்தம்அதை இன்னொரு முறை படித்தால்தான் முழுமையாகப் புரியும்பரியேறும் பெருமாள் படத்தை முறையோ முறையோ பார்த்தேன்ஒவ்வொரு முறை பார்க்கும் போது அது ஒரு புதிய வாழ்வைக் காட்டியது.

பா ரஞ்சித்துக்கும் மாரி செல்வராஜூக்கும் கல்யாண் ராவுக்கும் வணக்கங்கள்வாழ்வின் திரையை விலக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

தாய் நாவலையும் மீண்டும் ஒருமுறை படித்துக் கொண்டிருக்கிறேன்அதில் பாவெலும் அவனது அம்மாவும் தொழிலாளர்களும் தொழிற்சாலையும்தோழர்களும் அம்மாவின் பார்வையில் சொல்லப்படுகிறதுஅது சோசலிச யதார்த்தவாத படைப்பாம்அப்படி என்றால் கல்யாண் ராவின் படைப்பை என்னவென்று சொல்வது?

  ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழருக்கும் "சாதியை அழித்தொழிப்பதுமட்டுமின்றி "தீண்டாத வசந்தமும்கட்டாய பாடமாக இருக்க வேண்டும்அரசியலையும் வாழ்வையும் அவை கற்றுக் கொடுக்கின்றன.

 

 

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content:

 #genreviews.online, 

#genreviews, 

#productreviews,

 #bestreviews,

 #reviewportal"

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.