வாழ்வும் கவிதையும் ரசிக்கதக்கது.. கவிதையை ரசித்துபார்..வாழ்க்ககையை வாழ்ந்துபார்... கவிதை ரசிகனாக வாழ்வது ஒரு சுகம் வாழ்வியல் கவிதைகளின் தொகுப்பு..எழுதியவர் யாரோ...ரசிப்பன் நான்...உங்களுக்காக
வாழ்வும் கவிதையும் ரசிக்கதக்கது.. கவிதையை ரசித்துபார்..வாழ்க்ககையை வாழ்ந்துபார்... கவிதை ரசிகனாக வாழ்வது ஒரு சுகம் வாழ்வியல் கவிதைகளின் தொகுப்பு..எழுதியவர் யாரோ...ரசிப்பன் நான்...உங்களுக்காக
அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..
சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு
அவற்றை மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது
அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது
அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!!
அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே
இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!
ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்
அந்த பாடத்தை கற்க மறுத்தால்
வாழ்க்கை கடினமாகும்
இரு பக்கமும் கூர்மையான கத்தியை
கவனமாக பிடிக்க வேண்டும்..
அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு
கவனமாக பழக வேண்டும்..!
கடலில் கல் எறிந்தால்,
கடலுக்கு வலிப்பதில்லை மாறாக,
கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..
வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்
ஏனென்றால் எப்போது எதை இழப்போம்
என்பது நமக்கே தெரியாது
வாழ்க்கை என்பது
உனக்காக இடத்தை தேடுவது அல்ல
உனக்கான உலகத்தை உருவாக்குவது
மனமும் கண்ணாடியை போல்தான்
உடையும் வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை
யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள்
அதிகரிக்கபோவதில்லை
நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒன்று தான்.. அவமானம்.
உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்
அணை உடைத்த நீர் அழிவையே தரும்
மணம் உடைத்தவார்த்தை
இழிவையே தரும்
வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்
வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஆயிரம் ஆசிரியர்கள்
கற்றுக்கொடுக்க முடியாத
வாழ்க்கைப் பாடத்தை
ஒரு சில தோல்விகள்
நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்
வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள்
எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்
இறுதி வரை வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு
நேசிக்க யாரும் இல்லை என
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
நேசிக்க அன்பு வரும்பொழுது
அதை நினைக்க மறந்துவிடுகிறது
போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்
யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு
அது தெரியாத வரை
அனைவரும் நல்லவர்களே
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது
இருளில் தான்
வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும்
இருப்பது கரை என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை
தனக்கு உண்மையாக இருக்கும்
ஒருவனுக்கு யாருடைய உபதேசமும்
தேவையில்லை
தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று
எதுவும் இல்லை
அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே
வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை
மட்டுமே கேட்டால்
வாழ்க்கை வாழ்வதில் இல்லை,
நம் விருப்பத்தில் இருக்கிறது
வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருக்கிறார்கள்
தோல்வி கண்டவர்கள் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்
இதுதான் வாழ்க்கை
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு
நம்மை நாம் கேள்வி கேட்காதவரை
நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை
நிறைய பேர் செல்வதால்,
அது நல்வழி என்று பொருளல்ல.
ஒருவனின் தெளிவான குறிக்கோளே
வெற்றியின் முதல் ஆரம்பம்
நம்மீது நம்பிக்கை
நமக்கு இருக்கும்
வரை நம் வாழ்க்கை
நம் வசம்
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application:
https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote
#buymoteeshopping
#buymoteonline
#buymoteshopping
#buymoteapplication"



கருத்துகள்
கருத்துரையிடுக