ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனாவால் உலகையே மாற்ற முடியும்.’ - உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்வில் ஏதோவொரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவராக ஓர் ஆசிரியர் இருப்பார்

 


 

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்வில் ஏதோவொரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவராக ஓர் ஆசிரியர் இருப்பார். சில ஆசிரியர்கள் பாடத்தையும் வகுப்பறையையும் தாண்டி, மாணவர்களின் தனிமனித வாழ்க்கையில் அக்கறைகொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களால் பலரின் வாழ்க்கையே பின்னாளில் மாறியிருக்கும். வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற, இன்னும் இன்னும் உயர நம்மில் பலருக்கு ஆசிரியர்கள் தந்த உந்துதல் காரணமாக இருந்திருக்கும். அதனால்தான் நம் முன்னோர் அன்னை, தந்தைக்குப் பிறகு ஆசிரியரை தெய்வத்துக்கும் முன்னால் `மாதா, பிதா, குரு, தெய்வம்என வரிசைப்படுத்தி வைத்தார்கள்.

மாணவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைக்கும் ஆசிரியர்கள்

காலம் மாறுகிறது. வாழ்க்கை முறை மாறுகிறது. வகுப்பறையும் மாறுகிறது. தொழில்நுட்பம் ஆன்லைனிலேயே பாடம் படிக்கலாம் என்கிற சாத்தியத்தையும்கூட ஏற்படுத்திவிட்டது. ஆனால், கற்பித்தல் முறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இசை, நடனம், பள்ளிப் பாடங்கள், கல்லூரிப் பாடங்கள், மேற்படிப்புகள் என எதைக் கற்க வேண்டுமென்றாலும் ஓர் ஆசிரியர் அவசியம் என்கிற நிலை மட்டும் மாறவில்லை. வெறும் பாட எல்லைகளோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைக்கும் ஆசிரியர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.

ஆசிரியர் என்ற பெயரைச் சொன்னதுமே பலருக்கும் பள்ளிக்காலம் நினைவில் நிழலாடும். பல சம்பவங்கள் மனதுக்குள் வந்து வந்து போகும். அப்படி ஒரு சம்பவம்... ஒரு தலைமுறைப் பிள்ளைகளின் வாழ்க்கையையே மாற்றியமைத்த ஓர் ஆசிரியர் குறித்த கதை இது.

 

 

 


           

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

 

அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் நகரில் இருக்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (Johns Hopkins University). ஜான்ஸ் ஹாப்கின்ஸ் என்பவரால், ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம். 2022-ம் ஆண்டு மட்டும் இங்கே பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 30,549 என்கிறது ஒரு புள்ளிவிவரம். அது 1990-கள் காலகட்டம். அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், தன் மாணவர்களுக்கு ஓர் அசைன்மென்ட் கொடுத்தார்.

`நான் குறிப்பிடும் இந்தப் பகுதிக்கு நீங்கள் போக வேண்டும். அது, ஒடுக்கப்பட்ட, ஏழை மக்கள் வாழும் பகுதி. அங்கிருக்கும் 12-லிருந்து 16 வயதுக்குட்பட்ட 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களின் வாழ்க்கைச்சூழல், பின்புலம் எல்லாவற்றையும் விசாரியுங்கள். பிறகு, எதிர்காலத்தில் அவர்கள் யாராக, எந்தத் துறையைச் சேர்ந்தவராக மாறுவார்கள் என்பதை மதிப்பிட்டு வந்து ரிப்போர்ட்டாக சமர்ப்பியுங்கள்என்ற அசைன்மென்ட்.

 

ஒடுக்கப்பட்ட, ஏழை மக்கள் வசிக்கும் பகுதி

 

மாணவர்களும், பேராசிரியர் குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட, ஏழை மக்கள் வசிக்கும் பகுதிக்குப் போனார்கள். பேராசிரியர் குறிப்பிட்டிருந்த வயதிலிருந்த சிறுவர்களிடம் பேசினார்கள். அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கை முறை அனைத்தையும் புள்ளிவிவரங்களாகச் சேகரித்தார்கள். பிறகு தாங்கள் சேகரித்த புள்ளிவிவரங்களைத் தொகுத்துக்கொண்டு வந்து பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தார்கள். படித்தவுடனேயே அதிரவைக்கும் ஒரு சேதியைச் சொன்னது அந்த ஆய்வறிக்கையின் முடிவு... `அந்தப் பகுதியிலிருக்கும் சிறுவர்களில் 90 சதவிகிதம் பேர் சில காலமாவது சிறையில் கழிப்பார்கள்.’ அப்படி ஒரு குற்றப் பின்னணி கொண்டவர்களாக அவர்கள் பின்னாளில் மாறுவார்கள் என்றது ஆய்வறிக்கை.

இருபது வருடங்களுக்குப் பிறகு, அதே ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம். அதேபோல ஓர் ஆய்வு. அதே பகுதி. இன்னோரு மாணவர்கள் குழுவை, பல்கலைக்கழகம் அனுப்பிவைத்தது. முதலில் சென்ற குழு ஆய்வு மேற்கொண்ட சிறுவர்கள் தற்போது வளர்ந்திருந்தார்கள். அவர்களில் பலர் இப்போதும் அந்தப் பகுதியில்தான் வசித்தார்கள். சிலர் மட்டும் இறந்து போயிருந்தார்கள்; சிலர் வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்து போயிருந்தார்கள். ஆனாலும், முதலில் ஆய்வுசெய்யப்பட்ட 200 பேரில் 175 பேரை, தற்போது சென்றிருந்த குழுவினரால் சந்திக்க முடிந்தது. திரும்பத் திரும்ப அவர்களிடம் பேசியதில், விசாரித்ததில், புள்ளிவிவரங்களைத் திரட்டியதில் ஓர் ஆச்சர்யமான தகவல் கிடைத்தது.

 

 


 

 

முன்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில், ஒரு குழுவினரை விசாரித்ததில் அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிறைக்குப்போயிருந்தார்கள் என்ற தகவல் கிடைத்தது. முந்தைய ஆய்வு முடிவை உடைத்துப்போடுவதாக இருந்தது உண்மைநிலை. ஆய்வுக்குழுவினர் மேலும் தீவிரமாக விசாரித்தார்கள். முதல் குழு, தன் ஆய்வறிக்கையில் `90 சதவிகித சிறுவர்கள் சிறையில் கழிப்பார்கள்என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், 15 சதவிகிதம் பேர்கூட அப்படி சிறைக்குப் போகவில்லை. காரணம் என்ன அல்லது யார்?

அங்கிருந்த 75 சதவிகிதம் பேர் ஒருவரைக் கைகாட்டினார்கள். ஒற்றை மனுஷி. அவர் ஓர் ஆசிரியை. `அவர்தான் எங்களைப் புது வாழ்க்கையை நோக்கி அழைத்துப்போனார்என்று நெகிழ்ந்துபோய் ஒருவர் சொன்னார். அசந்துபோனது ஆய்வுக்குழு. அவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்தது. அவரைத் தேடிப்போனது. அவர், ஆசியர்கள் ஓய்வுபெறும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். ஆய்வுக்குழுவினர் ஆசிரியையுடன் மனம் திறந்து பேசினார்கள். அவரை மனமாரப் பாராட்டினார்கள். கடைசியில் அவர்களில் ஒருவர் அந்த ஆசிரியையிடம் கேட்டார்... ``அத்தனை பேரும் உங்களை இவ்வளவு தூரம் நினைவு வெச்சுருக்கறதுக்கு என்ன காரணம்னு சொல்ல முடியுமா?’’

``இல்லை, இல்லை. அப்படியெல்லாம் என்னால ஒரு காரணத்தையும் சொல்ல முடியாது’’ என்றவர், சில நிமிடங்கள் கண்களை மூடினார். நினைவுகளை அசைபோட்டார். பிறகு மகிழ்ச்சியில் முகம் மலர தனக்குத் தானே சொல்லிக்கொள்வதுபோல இப்படிச் சொன்னார்... ``எனக்கு அந்தப் பசங்களை ரொம்பப் பிடிச்சிருந்தது. அவங்களை ரொம்ப நேசிச்சேன்...’’

 

 

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application:

 https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content:

 #buymote  #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.