இந்த நாள் இனிய நாள்: மனம் சந்தோஷமாக மாற இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! வாழ்க்கை வாழ்வதற்கே! எத்தனை சோகங்கள் வந்தாலும் நீ துவண்டு போகாதே நண்பா, எல்லாவற்றையும் உன் அனுபவமாக மாற்று

 


நடந்ததை
நினைத்து வருந்தி கொண்டே இருந்தால் இன்று நடக்கும் நல்ல நினைவுகளை கூட மனம் அனுபவிக்க மறந்து விடுகிறது.

கடந்து போனது கடந்ததாகவே இருந்து விட்டுப் போகட்டும் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை மட்டும் நல்லதாக மாற்றுவதற்கு பாசிட்டிவ் சிந்தனைகள் மட்டுமே நமக்கு துணையாக வருகிறது.

மனசோர்வு வேண்டாம் நண்பா

நண்பர்களே, இந்த வாழ்க்கை என்பது வாழ்வதற்கு தான் என்று பலரும் கூறுவார்கள் ஆனால் நமக்கு என்று சில பிரச்சனைகளும் கஷ்டங்களும் வந்த போது நாம் அதற்குப் பிறகு அதிலிருந்து மீளாமல் அதையே யோசித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் யோசிக்கவில்லை என்றாலும் பல நிகழ்வுகள் அதைப்பற்றி சிந்திக்க வைத்து விடுகிறது. அதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி நம்முடைய மனதை சுறுசுறுப்பாக மாற்றுவது தான். மனதுக்கு சோர்வு வரும் போது தான் பழைய நிகழ்வுகளை அசைப்போட துவங்கும். மனதில் சோர்வு வந்தால் அது உடலையும் சோர்வாக்கி நம்மை நோயாளியாக மாற்றி விடும். அதனால் அந்த மனதையும் உடலையும் எப்போதும் சுறுசுறுப்பாக குழந்தைத்தனமாக வைத்துக் கொண்டாலே தேவை இல்லாத சிந்தனைகளும் கடந்து போன நிகழ்வுகளும் நம்மை விட்டு மறைந்து போய்விடு






சிந்தனையை மாற்ற வேண்டும்

வாழ்க்கையில் அனைத்தையும் தாங்கிக் கொள் என்று சொல்வது எல்லாருக்கும் எளிமையானது தான். ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்பவர்களுக்கு தான் தெரியும், அதில் உள்ள வலியும் வேதனையும். அதனால் யாருக்கும் நாம் பாடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஆனால் அந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொண்டே இருக்காமல் எப்படி அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். நமக்கு ஒரு சோகமோ, ஏமாற்றமோ, எதிர்பாராத இழப்போ ஏற்பட்டு விட்டால் மனது சந்தோஷமாக இருக்காது. துக்கமாகத்தான் இருக்கும் அதில் இருந்து நாம வெளிய வரணும் என்றால் அந்த நினைப்பு நம்மை விட்டு மறக்க வேண்டும் என்று நினைக்கவே கூடாது. நான் நம்முடைய மனதை வேறு திசைக்கு திருப்ப வேண்டும்.

பிடித்ததை ரசிக்கலாம்

உதாரணமாக நம்முடைய வேலையை அதிகரிக்க வேண்டும். அதுவும் பிடித்த வேலையை ரசித்து செய்ய வேண்டும். சிலருக்கு சமையல் செய்வது பிடிக்கும், சிலருக்கு படம் வரைவது பிடிக்கும், சிலருக்கு பாட்டு கேட்பது பிடிக்கும், சிலருக்கு இயற்கையை ரசிப்பது பிடிக்கும். நாம் சோகமாக இருக்கும்போது நமக்கு எது பிடிக்கிறதோ அதை ரசித்து செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ இதை மறப்பதற்காக செய்கிறேன் என்று நாம் செய்தாலோ அல்லது ஈடுபாடு இல்லாமல் இன்னொரு வேலையை செய்தாலோ நம்முடைய மனமும் எதை மறக்க நினைக்கிறோமோ அதில் தான் அடிக்கடி சென்றுவிடும்.




சோகத்தையே புலம்ப வேண்டாம்

எப்போதுமே எல்லோராலும் சந்தோஷமாக இருக்க முடியாது. எல்லோருக்கும் சோகம் துக்கம் சந்தோஷம் என எல்லாமே மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் நமக்கு தான் சோகம் இருக்கிறது,எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்ம சோகத்தை அடிக்கடி எல்லார்கிட்டயும் பகிர்ந்து கொண்டே இருந்தா அது மேலும் மேலும் நம்மை சோகத்தில் தான் ஆழ்த்தும். நமக்கு பிடித்த நபராக இருந்தாலும் நம்முடைய சோகத்தை அடிக்கடி அவங்ககிட்ட ஷேர் செய்யும் போது அவங்கள அறியாமலே நம்ம மேல அவங்களுக்கு ஒரு நெகட்டிவ் சிந்தனை உருவாகிவிடும். ஐயோ இவங்க ஒரு புலம்பல் கேஸ் என்று நம்மளை அவங்க ஒதுக்கி விட கூடும். அதுமட்டுமில்லாமல் நம்ம எதை நினைக்கணும்னு நினைக்கிறோமோ அதையே பேசிகிட்டு இருக்கும்போது அந்த சிந்தனை நம்மளை அறியாமல் மேலும் மேலும் நம்ம மூளையை ஆக்கிரமிக்க தொடங்கிடும்.




அம்புட்டு அழகு நீங்க

    சோகமாக இருக்கும்போது கண்ணாடி முன்பு நின்று உங்க முகத்தை பாருங்க, அதில் தெரியும் கண்களை பாருங்க, அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஒரு நிமிடம் ரசிச்சி பாருங்க. அப்படியே அந்த உதட்டை பாருங்க, அதில் லேசாக புண் முறுவல் செய்து பாருங்க, இப்போ உங்க முகம் எவ்வளவு அழகாக இருக்குன்னு பாருங்க. இந்த உலகத்துல உங்களை விட அழகா வேற யாராலும் இருக்கவே முடியாது. இதை மட்டும் எப்பவும் மனசுல நினைச்சுட்டு, எப்ப எல்லாம் சோகமா இருக்குமோ அப்ப உங்க அழகான முகத்தை மட்டும் பாருங்க, உங்களுக்கு அதுவே பெரிய பெரிய பாசிட்டிவ். நமக்கு ஆறுதல் வேறு யாருமே கிடையாது. நம்மளோட சிரிப்பு தான். இந்த சிரித்த முகத்தை வச்சுக்கிட்டே இன்றைய பணியை தொடங்குங்க எல்லாமே மகிழ்ச்சியாகமாறிவிடும்.

 

    "This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: 

    https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: 

    #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.