எதிலுமே ஒரு பிடிப்பு இருக்க வேண்டும்.. ஒரு வேட்கை இருக்க வேண்டும். வேட்கை இல்லாத செயல்கள் எதுவுமே நிறைவேறாது

 

  

உங்கள் கனவை நீங்கள் சாத்தியமாக்கும் போது, அதைக் கண்களால் பார்க்கும் முதல் ரசிகனாகவும் நீங்களே இருப்பீர்கள். உங்கள் வாயால் உலகம் அதைக் கேட்கப் போகிறது. நினைத்துப் பாருங்கள்... நாளை ரிலீஸ் ஆகப் போகும் சூப்பர் சினிமாவை, இன்றைக்கே ஒரு பெரிய அரங்கில் தனி ஆளாக நீங்கள் மட்டுமே முதலில் பார்க்கும் உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்

            எதிலுமே ஒரு பிடிப்பு இருக்க வேண்டும்.. ஒரு வேட்கை இருக்க வேண்டும். வேட்கை இல்லாத செயல்கள் எதுவுமே நிறைவேறாது.

வாழ்க்கையில் லட்சியம் தான் மனிதனுக்கு முதல் தேவை..

            வாழ்க்கையில் லட்சியம் தான் மனிதனுக்கு முதல் தேவை.. லட்சியம் இல்லாத, லட்சியத்தை அடையும் வேகம் இல்லாத, வேகம் காட்டாத வேட்கை இல்லாத எதையுமே நாம் எட்டிப் பிடிப்பது கஷ்டம்.. அனுபவித்தால்தான் அது தெரியும்

வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் நமக்கு ஓர் லட்சியம் வேண்டும். நம்முடைய லட்சியத்தை அடைவதற்காக நாம் போராட வேண்டும். லட்சியம் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். உங்களின் தேடலும் அதிகமாகும்.

லட்சியம் இல்லாத மனிதன் வாழ்கின்ற வாழ்வில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது

இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் உங்கள் குறிக்கோளை மட்டுமே கூர்ந்து கவனியுங்கள். லட்சியம் இல்லாத மனிதன் வாழ்கின்ற வாழ்வில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. அவர்களை யாரும் மதிக்கவும் மாட்டார்கள். ஆனால் தன் லட்சியத்திற்காக பாடுபடுபவர்களை இந்த உலகம் தலையில் வைத்துக் கொண்டாடும்.

நம் இலக்கு என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். நாம் வாழ்வில் தேடல் அவசியம். தேடல் உள்ளவரை தான் வாழ்வு இனிக்கும். உங்கள் வாழ்வின் இலக்கை நோக்கி வெற்றி நடை போடுங்கள். தோல்வி அடைந்தாலும் இலக்கை அடைய மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.

 


 

 

 

ஒவ்வொரு மனிதனுக்கும் வேட்கை வேண்டும்

ஒவ்வொரு மனிதனுக்கும் வேட்கை வேண்டும் அதை அடைய நாம் பயணிக்கும் போது வரும் தடைகளையெல்லாம் தாண்டி சாதனை படைப்போம். வேட்கை இருந்தால் நீங்கள் விரும்பியது உங்கள் வாழ்வில் நிச்சயம் கிட்டும்.

பெரியதோ, சிறியதோ... உங்கள் கனவை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். அதற்கு எல்லைகள் இல்லை. நீங்கள் கற்பனை காணும் ஒரு விஷயத்தை, நீங்களே சாத்தியமாக்குவது எவ்வளவு பெருமிதமான விஷயம்!

உங்கள் கனவுதான் உங்களை வடிவமைக்கிறது. அதை அடைந்த பிறகு, உங்கள் அடையாளமாக அதுவே இருக்கப்போகிறது. அடையாளத்தை இழந்துவிடாமல் இருக்க, கனவுகளைத் துரத்துங்கள்

 

"This Content Sponsored by Buy mote Shopping app

Buy Mote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buy mote E-Shopping)

Click Below Link and Install Application:

 https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content:

 #buymote

 #buymoteeshopping 

#buymoteonline 

#buymoteshopping 

#buymoteapplication"

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.