நல்ல மனசுடன் ஆரம்பிக்கும் .. எல்லா நாளும்.. நல்ல நாளே! மனசை எப்போதும் பாசிட்டிவா வச்சுக்கிட்டா.. அன்றைய நாள் முழுவதுமே பாசிட்டிவாகத்தான் இருக்கும்.
காலையில் எழுந்ததும் இன்று நமக்கு என்ன இருக்கு என்று ஜோதிடம் பார்க்க பலரும் தவறுவதில்லை.. ஆனால் உண்மையில் நல்ல மனசுடன் ஆரம்பிக்கும் எல்லா நாளுமே நல்ல நாள்தாங்க.. அதற்காக ஜோதிடம் தவறு என்று சொல்ல வரவில்லை.. மனசை எப்போதும் பாசிட்டிவா வச்சுக்கிட்டா.. அன்றைய நாள் முழுவதுமே பாசிட்டிவாகத்தான் இருக்கும்.
இறைவனை வணங்குங்கள்
காலையில் எழுந்தவுடன் இறைவனை வணங்குங்கள். மனதில் நல்லதையே நினையுங்கள். இந்த நாள் எனக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுங்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். முழு ஈடுபாட்டோடு உங்கள் செயலைச் செய்தால் வெற்றி நிச்சயம்.
ஜோதிடத்தில் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை ஆனால் அதில் மீது வைக்கும் நம்பிக்கையில் பாதியாவது உங்கள் மீது வையுங்கள். நல்ல விஷயங்களைக் கேளுங்கள். எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணுங்கள்.
தோல்வி அடைந்தால்
தோல்வி அடைந்தால் துவண்டு விடாமல் என்னுடைய வெற்றி கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது என்று நினைத்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். இந்த நாள் எனக்கு எப்படி இருக்குமோ என்று நினைக்காமல் இந்த நாள் எனக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று நினைத்து முழுமனதோடு உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள். எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கும் என்று நினைத்து உங்கள் வேலையைத் தொடங்குங்கள். மனதை பாசிட்டிவ் ஆக வைத்துக் கொண்டாலே.வாழ்வில் எல்லாமே பாசிட்டிவ் தான்.
மனக்கவலையில் ஆழ்ந்திருப்பவர்களையும், மனநோய்க்கு ஆளானவர்களையும் குணப்படுத்த கற்பனையாகச் சொல்லப்பட்டது தான் ''எல்லாம் நன்மைக்கே'' என்ற தன்னம்பிக்கை வாசகம்.
kd;dh; xUthpd; fij
மன்னர் ஒருவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். இருவரும் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். மன்னரின் நண்பர், வாழ்க்கையில் எது நடந்தாலும், எல்லாமே நல்லதுதான்' என்பார்.
ஒருநாள் மன்னரும் நண்பரும் வேட்டைக்குச் சென்றார்கள். மன்னர் பயன்படுத்தும் துப்பாக்கியைத் துடைத்துத் தோட்டாக்களைப் போட்டுக் கொடுத்தார் நண்பர்.
மன்னர் துப்பாக்கியை எடுத்துச்சுட, அது வெடித்து, மன்னருடைய கட்டைவிரல் துண்டானது. வலியில் மன்னர் துடிக்க, அந்த சூழ்நிலையிலும் அந்த நண்பர் இதுவும் நல்லதுதான் என்றார்.
மன்னருக்குக் கோபமும் எரிச்சலும் தாங்கவில்லை. ‘இல்லை... இது நல்லது இல்லை’ என்று கூறி அந்த நண்பரை சிறையில் தள்ளினார். ஓர் ஆண்டு கழிந்தது. மன்னர் மீண்டும் வேட்டைக்குச் சென்றார்.
இந்த முறை அவர் போகக்கூடாத ஒரு பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கே சில காட்டுவாசிகள் மன்னரைப் பிடித்து, அவர்களது கிராமத்துக்குக் கொண்டு போனார்கள்.
இந்தக் காட்டுவாசிகளோ, மனிதர்களைக் கொன்று மனித மாமிசத்தைச் சாப்பிடுவார்கள். அதன்படி மன்னரைத் தங்கள் குல தெய்வத்துக்கு நரபலி கொடுத்து அவரை சமைத்துச் சாப்பிட முடிவு செய்தார்கள்.
மன்னரை ஒரு தூணில் கட்டி, அவரைச் சுற்றி விறகுகளை அடுக்கி, தீ மூட்ட அருகில் வந்த போது, மன்னருக்கு ஒரு கட்டைவிரல் இல்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
அவர்களுடைய சம்பிரதாயப்படி அங்ககீனம் உள்ளவர்களை நரபலி கொடுக்கக் கூடாது. ஆகவே, அவரை விடுதலை செய்து விட்டார்கள்.
மன்னர் அரண்மனைக்குத் திரும்ப, எத்தகைய சூழலில் தன் கட்டை விரலை இழக்க நேரிட்டது என்பதை நினைவு கூர்ந்தார்.
அப்போது நண்பருக்குதான் இழைத்த கொடுமையும் நினைவுக்கு வந்தது. உடனே சிறையில் அடைக்கப்பட்ட தன் நண்பரை விடுவித்தார்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application:
https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping
#buymoteonline #buymoteshopping
#buymoteapplication"


கருத்துகள்
கருத்துரையிடுக