எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்
நண்பர்கள் என்றாலே நம் வாழ்க்கையில் நடக்கிற நல்லது , கெட்டதை பகிர்ந்து கொள்வது தான் . அதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆனால் நண்பர்களாகவே இருந்தாலும் உங்கள் வாழ்க்கையின் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது . அப்படி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாத விஷயங்கள் என்னென்னனு தெரிஞ்சிக்கணுமா ? வாங்க பார்க்கலாம் . நண்பர்கள் என்றாலே உயிரையே கொடுப்பார்கள் என்று இருந்த காலமெல்லாமல் மாறிவிட்டது . இந்த காலத்துல யாரை நம்பறது , யாரை நம்பக் கூடாதுனே தெரியறதில்லை . அதனால் நண்பர்களாகவே இருந்தாலும் சில விஷயங்களை மறைத்து வைப்பது தான் சிறந்தது . அது நிறைய தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்க இயலும் . வருமானம் , பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை நீங்கள் உங...