நீங்கள் பெண் குழந்தையின் தாயாக இருந்தால் இந்த 4 விஷயத்தை சொல்லிக் கொடுக்க மறக்காதீங்க

 

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் இந்த நான்கு விஷயத்தைக் கட்டாயம் உங்கள் அம்மா உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான இந்த நான்கு விஷயங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க மறக்காதீர்கள். அந்த நான்கு விஷயங்கள் இதோ...

                பொதுவாக பெண்கள் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மாதவிடாய் கால விஷயங்கள், குடும்ப பொறுப்புகள், வீட்டு வேலைகள், மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விஷயங்கள், போற வீட்ல மாமியார், மாமனார் கிட்ட எப்படி நடந்துக்கணும் இதுபோன்ற விஷயங்களைத் தான் காலங்காலமாக சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் தானாகவே பெண்கள் கற்றுக் கொள்வார்கள்.

இந்த காலத்துப் பெண்களைப் பொருத்தவரையில் அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான சில முக்கியமான விஷயங்களை குறிப்பாக அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விஷயங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அந்த விஷயங்களைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

 

மதிப்பை தெரிந்து கொள்ளுதல்

                பெண் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டிய முதல் விஷயம் இதுதான். உங்களுடைய மதிப்பை நீங்கள் முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களுடைய மதிப்பு என்ன என்பதை இந்த சமூகம் சொல்லத் தேவையில்லை. நீங்கள் தான் உங்கள் மதிப்பு என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும்.

மரியாதையை யாரிடமும் நீங்கள் கெஞ்சிக் கொண்டு இருக்கக் கூடாது. அது தானாகக் கிடைக்க வேண்டும். யாரிடமும் எதிர்பார்க்கக் கூடாது.

 


 

பொருளாதார சுதந்திரம்

                பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் பொருளாதார சுதந்திரம் தேவை. நீ சம்பாதிக்கிற பணம் உன்னிடம் இருந்தால் தான் அதற்கான சுதந்திரம் உன்னிடம் இருக்கும். பெண்ணுக்கு எப்போதுமே பொருளாதார சுதந்திரம் வேணும், உன்னுடைய சம்பாத்தியத்தை எப்படி, எதற்கு செலவு செய்ய வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும் என்பதையெல்லாம் நீ கற்றுக் கொள்ள வேண்டும், நீதான் முடிவு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.

நோ சொல்ல கற்றுக் கொள்ளுதல்

 
                நோ சொல்லக் கத்துக் கொடுங்க. நோ சொல்றதுக்கு யோசிக்கவே கூடாது. அது தப்பான விஷயமெல்லாம் இல்லை. லவ்வே இருந்தாலும் ங்க நோ சொல்றதுக்கு தப்பு கிடையாது. அங்கயும் ஒரு எல்லையை (Boundary) செட் பண்ணுங்க.

யாருகிட்ட பவுண்டரி செட் பண்ணணும், என்ன மாதிரி பவுண்ட்ரி செட் பண்ணணும் நீ தான் தீர்மானிக்கணும். நோ சொல்றது ஆட்டியூட் என்று யாராவது சொன்னால் நம்பாதீங்க. அது ஆட்டிடியூட் அல்ல. அது சுயமரியாதை என்று சொல்லிக் கொடுங்கள்.

தனிமைக்கு பயப்படக் கூடாது

உன்னுடைய வாழ்க்கையில் என்ன வேணும், நீ என்ன செய்ய வேண்டும் என்பதை நீ தான் தீர்மானிக்க வேண்டும். உன்னுடைய வாழ்க்கையின் திருப்பம் உன கையில் தான் இருக்கிறதே தவிர, அதை வேறு யார் கையிலும் கொடுக்கக் கூடாது என்று சொல்லித் தர வேண்டும்.

இறுதியாக,

மேலே சொன்ன நான்கு விஷயங்களையும் ஒரு அம்மாவாக நீங்கள் உங்கள் பெண்ணுக்குச் சொல்லித் தர வேண்டும். அதற்கு முன்பாக நீங்கள் அவர்களுக்கு இதுபோல் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு இதே நான்கு விஷயங்களை நீங்களும் பின்பற்றுங்கள்.

"This Content Sponsored by SBO Digital Marketing.

            Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"


 

 

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.