கலாம் கற்றுக்கொண்ட பாடம்

 



   இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (.எஸ்.ஆர்.) உள்நாட்டு ஏவூர்திகள் தயாரிப்பில் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது. வறுமையும் பஞ்சமும் மிகுந்த நாடாக இந்தியா அறியப்பட்டுக்கொண்டிருந்த நாள்களில் பி.எஸ்.எல்.வி. ஏவூர்தி வடிவமைப்பின் மூளையாக அவர் செயல்பட்டார். இந்தியாவின் முதல் உள்நாட்டுச் செயற்கைக்கோள் ஏவூர்தியைத் (எஸ்.எல்.வி. III) தயாரிக்கும் திட்டத்தின் இயக்குநராகக் கலாம் பொறுப்பு வகித்தார்.

          இந்திய மண்ணில் இருந்தே நம் செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும் என்பது இஸ்ரோ விஞ்ஞானிகளின் நெடுநாள் கனவு. அதை நிறைவேற்றும் வகையில் 1979 ஆகஸ்ட் 10 அன்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள் ஏவப்படும் நொடிக்காகத் தன் குழுவினருடன் கலாம் காத்திருந்தார். கவுன்ட் டவுன் முடிந்து செயற்கைக்கோள் விண்ணில் சீறிப்பாய வேண்டிய கடைசி நொடியில், திட்டத்தை நிறுத்தும்படி கணினி ஆணையிட்டது. சில நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழும்.

கணினி ஆணையா, நம் முடிவா

          அப்போது கணினி ஆணையா, நம் முடிவா என யோசித்துத் தீர்மானிப்பார்கள். தங்கள் தயாரிப்பின் மீது நம்பிக்கை கொண்ட திட்ட இயக்குநரான கலாம், கணினியின் ஆணையை மீறி செயற்கைக்கோளை ஏவுவதற்கு முடிவெடுத்தார். அது தவறான முடிவு என அடுத்த சில நொடிகளிலேயே அவருக்குப் புரிந்துவிட்டது. முதலில் நேராகச் சென்ற செயற்கைக்கோள் பிறகு கட்டுப்பாடின்றிச் சுற்றிச் சுழன்று வங்காள விரிகுடாவில் விழுந்தது. தான் சந்தித்த முதல் தோல்வி அது எனக் கலாம் குறிப்பிடுகிறார்.

தோல்வியை எப்படிக் கையாள்வது


 

          வெற்றியைக் கையாள முடிகிற தனக்குத் தோல்வியை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் நின்றதாக இந்தச் சம்பவம் குறித்துப் பின்னாளில் குறிப்பிட்டி ருக்கிறார். ஊடகங்களின் கேள்விகள் விஞ்ஞானிகளைச் சோர்வடையச் செய்துவிடும் என்பதால், அப்போதைய இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

          கலாம் தலைமையிலான குழு அடுத்த ஆண்டிலேயே இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் எனக் கூறினார். அதேபோல் 1980, ஜூலை 18 அன்று உள்நாட்டு ஏவூர்தி மூலம் ரோகிணி செயற்கைக்கோள் விண்ணில் ஏவத் திட்டமிடப் பட்டது. முதல் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதால் உலக நாடுகள் பலவும் இந்தியாவைச் சந்தேகக் கண்ணோடும் அவநம்பிக்கையோடும் பார்த்துக் கொண்டிருந்தன.

ரோகிணி செயற்கைக்கோள்


 

                    ஆனால், இந்தியர்களின் திறமையை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக ரோகிணி செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப் பட்டுப் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்டது. இதன் மூலம் செயற்கைக்கோள் ஏவும் திட்டங்களில் முன்னிலை வகித்த நாடுகளின் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்தது.

          வெற்றிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்புக்குக் கலாமைத் தலைமையேற்கும்படி சதீஷ் தவான் கேட்டுக்கொண் டார். அந்தச் சம்பவம் குறித்துத் தன் மேடைப்பேச்சிலும் புத்தகத்திலும் நெகிழ்ச்சியோடு கலாம் குறிப்பிட்டிருக்கிறார்: ‘அன்று மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். நாங்கள் தோல்வி அடைந்தபோது தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

          வெற்றி பெற்றபோது அந்தப் பெருமையை எங்கள் குழுவினருக்குக் கொடுத்தார். இந்த நிர்வாகப் பாடத்தை எந்தப் புத்தகத்தில் இருந்தும் நான் கற்றுக்கொள்ளவில்லை. அனுபவங்களில் இருந்தே கற்றேன்.” அதற்குப் பிறகு இஸ்ரோவுக்கு ஏறுமுகம்தான். பெரும் பாலான திட்டங்களில் முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றிகண்டிருக்கிறது


"This Content Sponsored by SBO Digital Marketing.

            Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"



 

   

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.